சித்திரை திருவிழா - ராசிபுரம்
நெய் , பட்டு , ஜவ்வரிசி , கல்வி ஆகியவற்றில் புகழ் பெற்ற ராசிபுரம் இப் பெயர் காரணம் ஒரு வரலாறு . இங்கு வீற்றிறுக்கும் பொன்வரதராஜபெருமாள் ஆகும் . இதனால் இத்தலம் பொன்வரதராஜபுரம் என திகழ்ந்தது .பின் மருவி வரதராஜபுரம் , ராஜபுரம் என மாறி ராசிபுரம் ஆனது . இத் தலத்தில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி வழிபட்ட கைலாசநாதர் ஆலயமும் உள்ளது . ஓரி கொல்லிமலையில் ஆண்டாலும் தனக்கு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவும், இறை வழிபாட்டிற்க்காகவும் ரகசிய சுரங்க பாதை வழியாக இங்கு வந்து செல்வது வாடிக்கை .இதன் நுழைவு வாயில்கள் இன்றும் ஆலயத்தில் காணலாம் .இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ராசிபுரத்தில் சித்திரை திருவிழா தொடங்கி தினசரி இரு சுவாமிகளின் திருவீதி உலா இரு வாரமாக நடைபெற்றது .பல்வேறு வாகனங்களில் நடைபெற்ற இவ் உலாவிற்கு பின் புதனன்று இரு திருக்கோயில்களிலும் இறைவனுக்கு திருமணம் சிறப்பாக நடந்தேறியது . வியாழன் , வெள்ளி ஆகிய நாட்களில் கைலாசநாதர் தேரும் , சனியன்று வடம் பிடிக்கப்பட்ட பெருமாள் தேர் இரவு கடைவீதியில் நிறுத்தப்பட்டு இன்று நிலை சேர்ந்தது.

No comments:
Post a Comment