Tuesday, April 7, 2009
கை / தோள் பை { பொய் ! }
தற்போது நீண்ட கைப்பிடி உள்ள கை / தோள் பைகளை வேலைக்கு மற்றும் படிக்க செல்பவர்கள் உபயோகம் செய்கிறார்கள் .இது அவர்களுக்கு மிகவும் உபயோகம் என்பதில் மறுப்பில்லை.ஏனெனில் ஏகப்பட்ட அறைகள் . ஒரு மினி மொபைல் பீரோவாக அதன் பயன் உள்ளது.அதிலும் ஏகப்பட்ட ( 10 க்கும் குறைவான ) ஜிப்புகள் .ஆனால் உபத்திரவம் அங்குதான் ஆரம்பம் .அந்த ஜிப்புகளால் அருகில் உள்ள ( அமர்ந்திருப்பவர்கள் ) பாடு அவ்வளவுதான் .அதன் கூரிய! முனைகள் குத்துவதை தான் பொறுக்க இயலவில்லை .ஒரு சௌகரியம் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஆக ஆகக்கூடாது.இதை அவர்கள் உண்ர் ந்தார்களோ? இல்லை அவர்கள் பணி,ஆனால் சரி என நினைப்பார்களோ ? தெரியவில்லை . தோளில் பையை மாட்டிக்கொண்டால்,அருகில் இருப்பவரை அதால் இடித்தால் அவர்களுக்கு சிரமம் என அவர்கள் நினைப்பதில்லை .மாறாக ஒன்றும் நடவாததை போல் இருப்பார் .சில காலம் முன்பு ஜோல்னா பை என்று ஒன்று மிக பிரபலம் .அதன் சிறப்பு அதன் இலகு தன்மை .அதை உபயோகிப்பவரை கிட்டத்தட்ட அறிவுஜூவியாக பார்த்தனர் ( சிலர் அவர்களை ஜோல்னா பொய்யர்கள் எனவும் கூறினர் ).சரி காலம் மாறிவிட்டது .திருந்துவார்களா ? தெரியவில்லை .! உங்கள் கருத்துகளை கூறிவிட்டு வாக்களிக்க மறக்காதீர் .
Subscribe to:
Post Comments (Atom)

4 comments:
அருகில் இருப்பவரை அதால் இடித்தால் அவர்களுக்கு சிரமம் என அவர்கள் நினைப்பதில்லை .மாறாக ஒன்றும் நடவாததை போல் இருப்பார் ///
ஆமா! கூர்மையா கவனித்திருக்கிறீர்கள்!
சில காலம் முன்பு ஜோல்னா பை என்று ஒன்று மிக பிரபலம் .அதன் சிறப்பு அதன் இலகு தன்மை .அதை உபயோகிப்பவரை கிட்டத்தட்ட அறிவுஜூவியாக பார்த்தனர் ( சிலர் அவர்களை ஜோல்னா பொய்யர்கள் எனவும் கூறினர் ).சரி காலம் மாறிவிட்டது .திருந்துவார்களா ? தெரியவில்லை .! உங்கள் கருத்துகளை கூறிவிட்டு வாக்களிக்க மறக்காதீர் .//
ஓட்டு போட்டாச்சு!
பதிவு நல்லா இருக்குங்க... இந்தமாதிரி பை நான் உபயோகிப்பதில்லை...
தொடர்ந்து எழுதுங்க... நடுவில கேப் விடாதீங்க.... எழுதறது உங்க சொந்த பதிவா இருந்தா சிறப்பு!!!
காலம் மாறிவிட்டது
Post a Comment