Tuesday, April 7, 2009
கை / தோள் பை { பொய் ! }
தற்போது நீண்ட கைப்பிடி உள்ள கை / தோள் பைகளை வேலைக்கு மற்றும் படிக்க செல்பவர்கள் உபயோகம் செய்கிறார்கள் .இது அவர்களுக்கு மிகவும் உபயோகம் என்பதில் மறுப்பில்லை.ஏனெனில் ஏகப்பட்ட அறைகள் . ஒரு மினி மொபைல் பீரோவாக அதன் பயன் உள்ளது.அதிலும் ஏகப்பட்ட ( 10 க்கும் குறைவான ) ஜிப்புகள் .ஆனால் உபத்திரவம் அங்குதான் ஆரம்பம் .அந்த ஜிப்புகளால் அருகில் உள்ள ( அமர்ந்திருப்பவர்கள் ) பாடு அவ்வளவுதான் .அதன் கூரிய! முனைகள் குத்துவதை தான் பொறுக்க இயலவில்லை .ஒரு சௌகரியம் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஆக ஆகக்கூடாது.இதை அவர்கள் உண்ர் ந்தார்களோ? இல்லை அவர்கள் பணி,ஆனால் சரி என நினைப்பார்களோ ? தெரியவில்லை . தோளில் பையை மாட்டிக்கொண்டால்,அருகில் இருப்பவரை அதால் இடித்தால் அவர்களுக்கு சிரமம் என அவர்கள் நினைப்பதில்லை .மாறாக ஒன்றும் நடவாததை போல் இருப்பார் .சில காலம் முன்பு ஜோல்னா பை என்று ஒன்று மிக பிரபலம் .அதன் சிறப்பு அதன் இலகு தன்மை .அதை உபயோகிப்பவரை கிட்டத்தட்ட அறிவுஜூவியாக பார்த்தனர் ( சிலர் அவர்களை ஜோல்னா பொய்யர்கள் எனவும் கூறினர் ).சரி காலம் மாறிவிட்டது .திருந்துவார்களா ? தெரியவில்லை .! உங்கள் கருத்துகளை கூறிவிட்டு வாக்களிக்க மறக்காதீர் .
Sunday, April 5, 2009
கவிதை !
பல ஆயிரம் செலவு செய்து விளம்பரம் செய்தார்கள் . சில ஆயிரம் சம்பளத்திற்கு "ஆட்கள் தேவை "என்று .
ஜ்வாலாமுகி என்ற தலம் - ஹிமாச்சல் பிரதேஷ்

இயற்கை ! உலகின் பல பாகங்களில் இயற்கை பல விதங்களில் வெளிப்படுத்தி உள்ளது .இந்தியாவின் வட மாநிலங்களில் இதை காணலாம் .குறிப்பாக ஹிமாச்சல் பிரதேஷை சொல்லலாம் . இங்கு ஜ்வாலாமுகி என்ற தலம் உள்ளது . , இங்கு தீ சுடரை வழிபடுவது விசேஷம் ஆகும் .இங்கு இயற்கையாக ( மலைகளின் பிளவில் ) எரிவாயு சிறிதளவு உற்பத்தி ஆகிறது .இதை அங்குள்ள பூசாரி தீயின் மூலம் எரிக்கிறார் .பக்தர்களின் வழிபாட்டிற்கு பிறகு நீரினால் அணைத்து ஒரு குழுவை அனுப்புகிறார் .பிறகு அடுத்த குழுவை ( 10 பேர் ) அனுமதிக்கிறார் .ஏனெனில் சிறிய அளவு வாயுதான் அங்கு தயார் ஆகிறது .மேலும் இதே மாநிலத்தில் அவ்வளவு பனியிலும் வென்னீர் உற்றுகள் உற்பத்தி ஆவது பலருக்கு தெரியும் .என்னே இயற்கையின் விந்தை !
Saturday, April 4, 2009
( பழைய ராசிபுரம் ) தொகுதி தற்போது நாமக்கல்
பழைய ராசிபுரம் தொகுதி தற்போது நாமக்கல் என புதிய நாமகரணம் செய்யப்பட்டு உள்ளது .பெரும்பாலும் தேசிய கட்சிகளே வெற்றி பெற்றுள்ளது .பேருக்கு ராசிபுரம் ஆனாலும் பெரும்பான்மையான எம் பி -க்கள் நமக்கல்லை சார்ந்து இருந்தனர் . காரணம் தொழில் நகரம் .லாரி , முட்டை என தேசிய அளவில் வியாபாரம் நடைபெறுவது .இத் தொகுதியில் தேவராஜன் 3 முறை பதவி வகித்துள்ளார் .இவரது சிறப்பு ,இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தோற்றபின்னும் வேறு உயர்த்த பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.உதரணமாக உதரணமாக திருமதி. ஜோதி வெங்கடாசலம் ,பின்னர் மாநில ஆளுனராக பதவி வகித்தார் .
Thursday, April 2, 2009
10 நொடிகளில் மொபைலை சார்ஜ் செய்யலாம்
தற்போது புழக்கத்தில் உள்ள மொபைல்கள் தொடர்பான பெரிய புகாரே, போனின் பேட்டரியை அன்றாடம் அரைமணி நேரமாவது சார்ஜ் செய்தால் தான் நிம்மதியாக பயன்படுத்த முடியும் என்பது தான். அமெரிக்காவின் மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி யின் விஞ்ஞானிகள், 10 நொடிகளில் மொபைலை சார்ஜ் செய்திட முடியும் என்று நிரூபித்துள்ளனர். தற்போது புழக்கத்தில் உள்ள பேட்டரிகளில் சார்ஜ் செய்யப்படும் போது, எலக்ட்ரான்கள் மெதுவாக கடத்தப்படுகின்றன. பொருட்களில் உள்ள சில பாதைகளில் அயனிகள் வேகமாக நகர்வதை இந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இதன் அடிப்படையில் வேகமாக சார்ஜ் செய்ய முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
நன்றி : தினமலர்
Subscribe to:
Comments (Atom)
