Sunday, August 2, 2026

கட்டளை ( கரூர் ) கோவிலில் உள்ள உபசன்னதிகள்

 கட்டளை கோவிலில் உள்ள உபசன்னதிகள் 





ஸ்ரீ பனையடி கருப்பு 







ஸ்ரீ ஓமந்தூர் சுவாமி, 

ஸ்ரீ காத்தவராயன் சுவாமி 






ஸ்ரீ பெரியசாமி 






ஸ்ரீ பேச்சியம்மன், 

ஸ்ரீ ராஜவியர் சுவாமி

Thursday, July 16, 2026

மஜூலி தீவு. கின்னஸில் இடம் பெற்றுள்ள, உலகின் மிகப்பெரிய; நன்னீர் தீவு . அசாம்

 

மஜூலி தீவு. கின்னஸில் இடம் பெற்றுள்ள, உலகின் மிகப்பெரிய; நன்னீர் தீவு . அசாம்

இந்த தீவின் பரப்பளவு சுமார் 352 சதுர கிலோமீட்ட. இது அசாமின் கலாச்சார தலைநகரமாக கருதப்படுகிறது. இங்கு சத்ரா எனப்படும் வைணவ மடங்கள் உள்ளது. இங்குமட்டும்  துளசி செடி  துளசி மரத்தை காணலாம்



இங்கு விலை உயர்ந்த பட்டு நெசவு நடைபெறுகிறது.

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியின் நடுவே அமைந்துள்ள உலகின் மிகப்பெரிய நதித் தீவாகும். சுமார் 352 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இத்தீவு, அசாமின் கலாச்சார தலைநகரமாகக் கருதப்படுகிறது



இது பாரம்பரியமிக்க 'சத்ரா' எனப்படும் 65 க்கும் மேற்பட்ட  வைணவ மடங்கள் உள்ளது   



பழங்குடியின மக்களின் தனித்துவமான வாழ்க்கை முறைக்கும் பெயர் பெற்றது.

மஜுலி தீவு பற்றிய முக்கிய சிறப்பம்சங்கள்:அமைவிடம் & உருவாக்கம்:

அசாமின் ஜோர்ஹாட் (Jorhat) நகரில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது. பிரம்மபுத்திரா மற்றும் சுபன்சிரி நதிகளால் சூழப்பட்ட இந்த தீவு, 18-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் உருவானது.

கலாச்சாரம்:

15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி ஸ்ரீமந்த சங்கர்தேவாவால் தொடங்கப்பட்ட நவ-வைஷ்ணவ பாரம்பரியத்தின் மையமாகத் திகழ்கிறது. இங்குள்ள 'சத்ரா' (Satras) மடங்கள், கலை, நடனம், மற்றும் பாரம்பரிய முகமூடி தயாரிப்புக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை.பழங்குடியின மக்கள்: மிஷிங் (Mishing), சোনোவால் கச்சாரி (Sonowal Kachari), மற்றும் தேவ்ரி (Deori) ஆகிய பழங்குடியின மக்கள் இங்கு அதிகம் வாழ்கின்றனர்.

சுற்றுலா:

பிரம்மபுத்திரா நதிக்கரையின் அழகிய சூரிய அஸ்தமனம், அரிய வகை பறவைகள், மற்றும் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன.

பயண வழிகள்:

ஜோர்ஹாட்டில் உள்ள நிமாதி காட்டில் (Nimati Ghat) இருந்து படகுகள் அல்லது ஃபெர்ரி (Ferry) மூலம் மஜுலியை அடையலாம்.

 65 க்கும் மேற்பட்ட சத்ராக்கள்

 


மஜூலியில் பார்க்க வேண்டிய சிறந்த 5 இடங்கள்

https://www-transindiatravels-com.translate.goog/assam/majuli/tourist-places-to-visit-in-majuli/?_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=imgs

 மஜூலியின் பிரபலமான முகமூடிகள்

https://ruralindiaonline.org/article/the-many-masks-of-majuli-ta

Sunday, July 12, 2026

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், அக்னிப்பிரவேசம் செய்ததாக கருதப்படும் முகாமலா

 

ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன், அக்னிப்பிரவேசம் செய்ததாக கருதப்படும்;  முகாமலா .

இதில் சில மாறுபட்ட கருத்துகளும் உள்ளது

வாசவி கன்யா பரமேஸ்வரி அம்மன் அக்னி குண்டத்தில் இறங்கிய இடம் இந்த கோவில் இருக்கும் முகாமலா என்கிற இந்த ஊரில் தான். பெனுகொண்டாவில் இருந்து சுமார் 17 கி.மீட்டர். பஸ்ஸில் போக முடியாது.

ஆட்டோ அல்லது காரில் மட்டுமே செல்ல முடியும். கோவில் முழுவதும் சுற்றி பார்த்தால் அங்காளம்மன் கோவிலோ என்று சந்தேகம் வரும். அந்த அளவிற்கு கோவில் முழுவதும் நிறைய நாக சிலைகள், மண்டைஓடு அணிந்த காளி சிலை மற்றும் அம்மன் சிலைகள் அதிகம் உள்ளது. அனைத்து சிலைகளும் அருமையாக உள்ளது.

விநாயகர் முதல் சக்கரத்தாழ்வார், நரசிம்மர் மற்றும் 102 கோத்திரத்திற்கு 102 சில லிங்கம் உள்ளது. குறிப்பிட்ட நாட்களில் மட்டும் 102 கோத்திர லிங்கங்களுக்கு நம் கையால் அபிஷேகம் செய்யலாம். மூலவர் இருக்கும் இடத்தில் 4 கன்யா பரமேஸ்வரி அம்மன் சிலைகள் வேறு வேறு அளவுகளில் உள்ளது. அதில் 3 வதாக உள்ள சிலையின் கீழ் வாசவி அம்மன் இறங்கிய அக்னி குண்டம் இருப்பதாக அங்குள்ள ஸ்வாமீஜி தெரிவிக்கிறார்.

மேலும் வருடத்தில் ஒருநாள் மட்டும் அதாவது வாசவி அக்னி பிரவேச தினத்தன்று மட்டும் அந்த 3 வது சிலையின் கீழ் இருக்கும் அக்னி குண்டத்தை மாலை 6-7 மணிவரை மட்டுமே பார்க்க முடியும்.

பெனுகொண்டாவில் இருப்பது அம்மன் பிறந்த இடம் என்றும் இங்கு மோட்சம் அடைந்த இடம்  .கோவிலுக்கு வருபவர்களின் வாட்ஸ்அப் நம்பரை கேட்டு வாங்கி கொள்கிறார்கள். குருஜி நம்பரை பதிவு செய்து ஓம் என்று மெசேஜ் அனுப்ப சொல்கிறார்கள் . குருஜி நம்பரில் இருந்து உங்களுக்கு அங்கு நடக்கும் பூஜை, ஹோம, பண்டிகைகளின் நிகழ்ச்சிகளை அனுப்புகிறார்களாம். அனைத்து சிலைகளும் அழகாக இருப்பதால் ஒருமுறையாவது சென்று பாருங்கள் .

ஆட்டோ Up & Down Rs 400.00. Car Rs 600-800.00.

சில போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

ஜெய் வாசவி .

  சில  வீடியோ இணைப்புகள் : 





















Link 1

https://www.youtube.com/watch?v=6wvgVIUPRzI

 Link 2

https://www.youtube.com/results?search_query=mukkamala+manasa+devi+temple

 LINK : 3 https://www.google.com/maps/place/Mukkamala+Maha+Kshetram/@16.7535349,81.7690042,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sCIABIhD9Oh0xvIE4XKZofhng8EmR!2e10!3e12!6shttps:%2F%2Flh3.googleusercontent.com%2Fgps-cs-s%2FAPNQkAGo82J4duUC2Aa7Skj3qLxsi6fP0CBzAi1LZoHTJh6QcFuuSe5EUqE6h5tVWcXMA9mYdYHi83kMHIr0Vj7PXFXBfBI1uCd5gPYM1VBEF_3NWttC7jvoxamFUN8hSC2yQ0AzeJExBtJKz98D%3Dw203-h152-k-no!7i4000!8i3000!4m9!3m8!1s0x3a37b8a8b5ee213f:0xa202db561ec7bdf!8m2!3d16.7535349!4d81.7690042!10e5!14m1!1BCgIgAQ!16s%2Fg%2F11b8b2nphc?entry=ttu&g_ep=EgoyMDI2MDYwMy4xIKXMDSoASAFQAw%3D%3D

 Link : 4

https://www.google.com/maps/place/Mukkamala+Maha+Kshetram/@16.7535349,81.7690042,3a,75y,90t/data=!3m8!1e2!3m6!1sCIHM0ogKEICAgIDEy_aeXQ!2e10!3e12!6shttps:%2F%2Flh3.googleusercontent.com%2Fgrass-cs%2FANxoTn3L9s8ksi43o2aXYy3ERVApQlVuhTreffX6Un1Lg-qoEjJ9vntd264e1g1yOxst5JcWSu29NwUe56IvjU4-CtXTWiws30hNdBvh_It_hqG_WLDkx1qmKJj4jvTSI-iNcQrDol2T%3Dk-no!7i3072!8i4096!4m16!1m7!3m6!1s0x3a37b8a8b5ee213f:0xa202db561ec7bdf!2sMukkamala+Maha+Kshetram!8m2!3d16.7535349!4d81.7690042!16s%2Fg%2F11b8b2nphc!3m7!1s0x3a37b8a8b5ee213f:0xa202db561ec7bdf!8m2!3d16.7535349!4d81.7690042!9m1!1b1!16s%2Fg%2F11b8b2nphc?entry=ttu&g_ep=EgoyMDI2MDYwMy4xIKXMDSoASAFQAw%3D%3D

Monday, March 14, 2011

ALERT! Japan government confirms.BBC flash news:

ALERT! Japan government confirms.BBC flash news: Japan government confirms radiation leak at fukushima nuclear plants. Asian countries should take necessary precautions. If it rains, remain indoors first 24hours, close doors n windows, swab neck skin with beta-dine where thyroid area is, radiation hits thyroid first. Take extra precautions, radiation may hit Philippines starting 4pm (Pinas time) today! PLEASE PASS TO ALL

Sunday, March 13, 2011

கத்தி முனையில் உங்களை மிரட்டி - ATM மெசினில் இருந்து பணம் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டால்..

Dear All,

If someone were to force you to withdraw money from ATM,THEN.......

If you are ever forced by a thief or someone to take money out of an ATM machine, enter your pin number reversed.

So if your number is 1254 mark 4521.

The ATM machine will give you your money, but will automatically recognize this as a plea for help and will alert the police unknown to the thief.

This option is in all ATM machines, but not many people know this.

Please pass this information on to others. No harm in keeping this in mind!!


வெரி important திங் : உங்கள் பாஸ் வோர்ட் - அதை போல செட் பண்ணிக்கொள்வது நல்லது.

உதாரணத்திற்கு : 4334 என்று எந்த பக்கம் இருந்து வந்தாலும் , அதே நம்பர் வரும்படி வைக்காதீர்கள்


Read more: http://www.livingextra.com/2011/03/atm.html#ixzz1GUefgTU7

Wednesday, January 13, 2010

உஷார்.உஷார்.

சில பீட்டா தளங்கள் மற்றும் அனாமதேய மின்னஞ்சல்கள்,தங்கள் வங்கி பரிவர்தனைகளை ஒரே தளத்தில் இயங்க செய்வதாக கூறி, வங்கி பெயர்,கண்க்கு எண், கடவு எண் ஆகிய விபரங்களை கேட்கிறது. அதன் நம்பகத்தன்மை தெரியததால் “ மிகவும் உஷாராக இருக்கவும்.”.சில அஞ்சல்கள் தங்கள் கணக்கு வேறு IP முகவரியில் பரிவர்தனை செய்யப்படுகிறது. சரி பார்கவும் , என தவறான வங்கி பெயரை தெரிவிக்கிறது.எனவே உஷார்.உஷார்.

Tuesday, December 29, 2009

வறுமை

முன்பு ஏழ்மை தாலித் தங்கம் விற்கப்பட்டது.
தங்கத்தாலிக்கு பதில் மஞ்சள் கொம்பு கழுத்தில் ஏறியது.
தற்போது மஞ்சள் விலையும் ஏறியது.
மீண்டும் ஏழ்மை மஞ்சளுக்கு பதிலி ?

Wednesday, December 23, 2009

சேலம் பகுதி பதிவர்கள் கவணத்திற்கு

சேலம் பகுதி பதிவர்கள் கவணத்திற்கு. .

ஈரோடு பதிவர் சந்திப்பின் வெற்றியை தொடர்ந்து சேலத்தில் பதிவர் சந்திப்பு நடத்த உள்ளதால் விருப்பம் உள்ள பதிவர்கள் தொடர்பு கொள்ளவும். உங்களின் மேலான கருத்துகளை அன்புடன் தெரிவிக்கலாம். பதிவுலகின் எதிர் காலம் நமது முயற்சியால் தான் உள்ளது .பதிவுலகின் வாய்ப்புகள், நவீன தொழில் நுட்பம், வசதிகள், தமிழ் பயன்பாடு ஆகியன கலந்துரையடலில் இடம்பெற உள்ளது.

தொடர்பு கொள்க : P வெங்கடேசன் 94432 41690

Saturday, November 14, 2009

மழை ! அப்படி என்றால் !

ஊரெல்லாம்மழைஇதுசெய்தி. ஆனால்சிலஇடங்களில்வறட்சி. இதுவும்செய்தி. ஏன்இயற்கைக்குஇந்தஓர்வஞ்சனை. அதற்கு வஞ்சனை கிடையாது!. அதுஇயற்கைஆகாவேவஞ்சனைஇல்லாமல்செல்வத்தாய்வாரிவழங்கிஉள்ளது. அதைநாம்சரியாககாப்பதுஇல்லை. உதாரணமாக சேலெத்தில்சுமார்மழை. ஆனால்25 கிமீவடக்கில்இல்உள்ளஓமளுரில்நல்லமழை. மாறாக25 கிமீதெற்கில்உள்ளராசீபுரத்தில்மழைஅவ்வளவாககிடையாது.40ஆண்டுகள்கழித்துகிணற்றில்நீர்வற்றிஉள்ளது.இதார்க்குஎன்னவிமோசனம்.என்இன்நிலை.இயற்கைஆர்வளர்கள்தீர்ப்பபர்களா?அல்லதுஅரசுதான்தீர்க்குமா?வழிதான்என்ன?என்ன?

Monday, August 17, 2009

ராமன் - சீதை- திருமண கனவு

அவனுக்கோ தனக்கு சீதை- ஐ போன்றவளை மணக்க விருப்பம் ;அவளுக்கும் தனக்கு ராமன் - ஐ போன்ற வ் மணக்க விருப்பம் ; ஆனால் அவள் மணந்ததோ " தசாரதனை " அல்லவா ? .

Wednesday, August 5, 2009

புரியாத திரைப்புதிர் !

வாரணம் ஆயிரம் வெற்றிக்கு ! பின் " வா " செண்டிமெண்ட், வாமணன் வெற்றி ! இதை தொடர்ந்து ! ! ! !
|
V
|
V
|
V
|
V
|
V
|
V
யூகித்தீரா ?





" வானரம் "

Sunday, June 28, 2009

நிலை மாறிய ( ராசிபுரம் ) நாமக்கல்

என்னுடைய ஏப்ரல் 4 தேதிய பதிவில் குறிப்பிட்ட தகவல் பல படி மேலேறி ,எம்பி மந்திரி ஆகிவிட்டார் .

Sunday, May 10, 2009

உளறல்கள்: மனசு

உளறல்கள்: மனசு

சித்திரை திருவிழா - ராசிபுரம்

சித்திரை திருவிழா - ராசிபுரம் 

                                   நெய் , பட்டு , ஜவ்வரிசி , கல்வி ஆகியவற்றில் புகழ் பெற்ற ராசிபுரம் இப் பெயர் காரணம் ஒரு வரலாறு . இங்கு வீற்றிறுக்கும் பொன்வரதராஜபெருமாள் ஆகும் .   இதனால் இத்தலம் பொன்வரதராஜபுரம் என திகழ்ந்தது .பின் மருவி வரதராஜபுரம் , ராஜபுரம் என மாறி ராசிபுரம் ஆனது . இத் தலத்தில் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி வழிபட்ட கைலாசநாதர் ஆலயமும் உள்ளது . ஓரி கொல்லிமலையில் ஆண்டாலும் தனக்கு எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கவும், இறை வழிபாட்டிற்க்காகவும் ரகசிய சுரங்க பாதை வழியாக இங்கு வந்து செல்வது வாடிக்கை .இதன் நுழைவு வாயில்கள் இன்றும் ஆலயத்தில் காணலாம் .இத்தகைய சிறப்புகள் வாய்ந்த  ராசிபுரத்தில் சித்திரை திருவிழா தொடங்கி தினசரி இரு சுவாமிகளின் திருவீதி உலா இரு வாரமாக  நடைபெற்றது .பல்வேறு வாகனங்களில் நடைபெற்ற இவ் உலாவிற்கு பின் புதனன்று இரு திருக்கோயில்களிலும் இறைவனுக்கு திருமணம் சிறப்பாக நடந்தேறியது . வியாழன் , வெள்ளி ஆகிய நாட்களில் கைலாசநாதர் தேரும் , சனியன்று வடம் பிடிக்கப்பட்ட  பெருமாள் தேர் இரவு கடைவீதியில் நிறுத்தப்பட்டு இன்று நிலை சேர்ந்தது. 

Tuesday, April 7, 2009

கை / தோள் பை { பொய் ! }

தற்போது நீண்ட கைப்பிடி உள்ள கை / தோள் பைகளை வேலைக்கு மற்றும் படிக்க செல்பவர்கள் உபயோகம் செய்கிறார்கள் .இது அவர்களுக்கு மிகவும் உபயோகம் என்பதில் மறுப்பில்லை.ஏனெனில் ஏகப்பட்ட அறைகள் . ஒரு மினி மொபைல் பீரோவாக அதன் பயன் உள்ளது.அதிலும் ஏகப்பட்ட ( 10  க்கும் குறைவான ) ஜிப்புகள் .ஆனால் உபத்திரவம் அங்குதான் ஆரம்பம் .அந்த ஜிப்புகளால் அருகில் உள்ள ( அமர்ந்திருப்பவர்கள் ) பாடு அவ்வளவுதான் .அதன் கூரிய! முனைகள் குத்துவதை தான் பொறுக்க இயலவில்லை .ஒரு சௌகரியம் மற்றவர்களுக்கு இடைஞ்சல் ஆக ஆகக்கூடாது.இதை அவர்கள் உண்ர்   ந்தார்களோ? இல்லை அவர்கள் பணி,ஆனால் சரி என நினைப்பார்களோ ? தெரியவில்லை . தோளில் பையை மாட்டிக்கொண்டால்,அருகில் இருப்பவரை அதால் இடித்தால் அவர்களுக்கு சிரமம் என அவர்கள் நினைப்பதில்லை .மாறாக ஒன்றும் நடவாததை போல் இருப்பார் .சில காலம் முன்பு ஜோல்னா பை என்று ஒன்று மிக பிரபலம் .அதன் சிறப்பு அதன் இலகு தன்மை .அதை உபயோகிப்பவரை கிட்டத்தட்ட அறிவுஜூவியாக பார்த்தனர் ( சிலர் அவர்களை ஜோல்னா பொய்யர்கள் எனவும் கூறினர் ).சரி காலம் மாறிவிட்டது .திருந்துவார்களா ? தெரியவில்லை .!  உங்கள் கருத்துகளை கூறிவிட்டு வாக்களிக்க மறக்காதீர் .

Sunday, April 5, 2009

கவிதை !

பல ஆயிரம் செலவு செய்து விளம்பரம் செய்தார்கள் . சில ஆயிரம் சம்பளத்திற்கு "ஆட்கள் தேவை "என்று .

ஜ்வாலாமுகி என்ற தலம் - ஹிமாச்சல் பிரதேஷ்


                   இயற்கை ! உலகின் பல பாகங்களில் இயற்கை பல விதங்களில் வெளிப்படுத்தி உள்ளது .இந்தியாவின் வட மாநிலங்களில் இதை காணலாம் .குறிப்பாக ஹிமாச்சல் பிரதேஷை சொல்லலாம் . இங்கு ஜ்வாலாமுகி என்ற தலம் உள்ளது . , இங்கு தீ சுடரை வழிபடுவது விசேஷம் ஆகும் .இங்கு இயற்கையாக ( மலைகளின் பிளவில் )  எரிவாயு சிறிதளவு உற்பத்தி ஆகிறது .இதை அங்குள்ள பூசாரி தீயின் மூலம் எரிக்கிறார் .பக்தர்களின் வழிபாட்டிற்கு பிறகு நீரினால் அணைத்து ஒரு குழுவை அனுப்புகிறார் .பிறகு அடுத்த குழுவை ( 10  பேர் ) அனுமதிக்கிறார் .ஏனெனில் சிறிய அளவு வாயுதான் அங்கு தயார் ஆகிறது .மேலும் இதே மாநிலத்தில் அவ்வளவு பனியிலும் வென்னீர் உற்றுகள் உற்பத்தி ஆவது பலருக்கு தெரியும் .என்னே இயற்கையின் விந்தை !

Saturday, April 4, 2009

( பழைய ராசிபுரம் ) தொகுதி தற்போது நாமக்கல்

                  பழைய ராசிபுரம் தொகுதி தற்போது நாமக்கல் என புதிய நாமகரணம் செய்யப்பட்டு உள்ளது .பெரும்பாலும் தேசிய கட்சிகளே வெற்றி பெற்றுள்ளது .பேருக்கு ராசிபுரம் ஆனாலும் பெரும்பான்மையான எம் பி -க்கள் நமக்கல்லை சார்ந்து இருந்தனர் . காரணம் தொழில் நகரம் .லாரி , முட்டை என தேசிய அளவில் வியாபாரம் நடைபெறுவது .இத் தொகுதியில் தேவராஜன் 3 முறை பதவி வகித்துள்ளார் .இவரது சிறப்பு ,இவரை எதிர்த்து போட்டியிட்டவர்கள், தோற்றபின்னும் வேறு உயர்த்த பதவிக்கு நியமிக்கப்பட்டனர்.உதரணமாக உதரணமாக   திருமதி. ஜோதி வெங்கடாசலம் ,பின்னர் மாநில ஆளுனராக பதவி வகித்தார் .